MARC காட்சி

Back
மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்
245 : _ _ |a மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் -
246 : _ _ |a இலக்ஷிதாயனம்
520 : _ _ |a விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளகுடைவரைக் கோயில் என இங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இக்குடைவரை கோயில் தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயிலாகும். கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது. இக்கோயில். தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது. மிகவும் எளிய, எழில் வாய்ந்த குடைவரைக் கோயிலாக இக்கோயில் விளங்குகிறது.
653 : _ _ |a மண்டகப்பட்டு, குடைவரைக்கோயில், பல்லவர், மகேந்திரவர்மன், முதல் குடைவரை, இலக்ஷிதாயனம், மும்மூர்த்தி குடைவரை, ஏழு குடைவரைகள், விசித்திரசித்தன்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
905 : _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/ முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன்
909 : _ _ |a 8
910 : _ _ |a 1400 ஆண்டுகள் பழமையானது. பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனனால் கட்டப்பட்ட தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயிலாகும்.
914 : _ _ |a 12.1077012
915 : _ _ |a 79.4565008
916 : _ _ |a பிரம்மன், விஷ்ணு, சிவன்
927 : _ _ |a இக்குடைவரைக் கோயிலில் உள்ள மகேந்திரவர்மனின் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பல்லவ கிரந்த எழுத்தில் உள்ள சமஸ்கிருத கல்வெட்டு, இந்தக் கோயிலை செங்கல், மரம், உலோகம், சுதை இன்றி நான்முகன், திருமால், சிவபெருமான் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் விசித்திர சித்தனாகிய நான் தோற்றுவித்தேன் என்று மகேந்திரவர்மன் கூறுவதாக குறிப்பிடுகிறது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a மும்மூர்த்திகளின் குடைவரைக் கோயிலின் வாயிலின் இருபுறமும் இரு வாயிற்காவலர்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
930 : _ _ |a தலபுராணம் இல்லை.
932 : _ _ |a இக்குடைவரைக் கோயில் மூன்று கருவறைகளை உடையதாக இருக்கிறது. அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகியவற்றை கொண்டள்ளது. அர்த்தமண்டபத்தில் இரண்டு அரைத்தூண்களும், இரண்டு முழுத்தூண்களும் உள்ளன. இரண்டு முழுத்தூண்களும் தரையில் இருந்து சதுரம், கட்டு, சதுரம் என உள்ளது. அவ்வாறே முகமண்டபமும் அமைக்கப்பட்டள்ளது. முகப்பின் இருபுறமும் அமைந்து உட்குழிவு வளைவில் இருபுறமும் வாயிற்காவலர்கள் நிற்கின்றனர். மேற்குப்புறத்தில் உள்ள அரைத்தூணில் பல்லவ கிரந்தத்தில் வடமொழி கல்வெட்டில் இக்குடைவரை லக்ஷிதாயனம் என பெயரிடப்பட்டுள்ளது.
933 : _ _ |a இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.
934 : _ _ |a தளவானூர் குடைவரைக் கோயில், செஞ்சிக் கோட்டை
935 : _ _ |a மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் விழுப்புரம் செஞ்சி சாலையில், விழுப்புரத்திலிருந்து இருபதாவது கிலோமீட்டரில் வலப்புறம் பிரியும் மண்சாலை வழியே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், செஞ்சியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a மண்டகப்பட்டு
938 : _ _ |a விழுப்புரம்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a விழுப்புரம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000098
barcode : TVA_TEM_000098
book category : சைவம்
cover images TVA_TEM_000098/TVA_TEM_000098_குடைவரை-கோயில்_மூன்று-கருவறைகள்-0007.jpg :
Primary File :

TVA_TEM_000098/TVA_TEM_000098_குடைவரை-கோயில்_பொதுத்தோற்றம்-0001.jpg

TVA_TEM_000098/TVA_TEM_000098_குடைவரை-கோயில்_மண்டபம்-தூண்கள்-0002.jpg

TVA_TEM_000098/TVA_TEM_000098_குடைவரை-கோயில்_முகமண்டபம்-0003.jpg

TVA_TEM_000098/TVA_TEM_000098_குடைவரை-கோயில்_அர்த்தமண்டபம்-0004.jpg

TVA_TEM_000098/TVA_TEM_000098_குடைவரை-கோயில்_வாயிற்காவலர்-0005.jpg

TVA_TEM_000098/TVA_TEM_000098_குடைவரை-கோயில்_வாயிற்காவலர்-0006.jpg

TVA_TEM_000098/TVA_TEM_000098_குடைவரை-கோயில்_மூன்று-கருவறைகள்-0007.jpg

TVA_TEM_000098/TVA_TEM_000098_குடைவரை-கோயில்_கருவறை-0008.jpg

TVA_TEM_000098/TVA_TEM_000098_குடைவரை-கோயில்_கருவறை-தோற்றம்-0009.jpg

TVA_TEM_000098/TVA_TEM_000098_குடைவரை-கோயில்_வாயிற்காவலர்-முகம்-0010.jpg

TVA_TEM_000098/TVA_TEM_000098_குடைவரை-கோயில்_கல்வெட்டு-0011.jpg